2வது நாள் வசூல் எவ்வளவு?!… விஜய் ஆண்டனிக்கு ஹிட் கொடுக்குமா மார்கன்?!.

Published on: August 8, 2025
---Advertisement---

Maargan: இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் விஜய் ஆண்டனி. நான் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். சலீம், பிச்சைக்காரன் என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும், பிச்சைக்காரன் படம் 100 கோடி வரை வசூல் செய்து விஜய் ஆண்டனியை ஒரு முன்னணி ஹீரோவாக மாற்றியது. அதோடு, இந்த படம் தெலுங்கிலும் சூப்பர் ஹிட் அடித்தது.

எனவே, அதன்பின் உருவான விஜய் ஆண்டனியின் படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. இடையில் சில சறுக்கல்கள் வந்தாலும் பிச்சைக்காரன் 2 படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை அவரின் நடிப்பில் மார்கன் என்கிற படம் வெளியானது.

வழக்கம்போல் இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்தும் இருந்தார். அதேடு, இந்த படத்திற்கு இசையும் அவரே. ஒரு சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தொடர் கொலைகள் நடக்கும்போது அதை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்கிற வழக்கமான கதைதான்.

ஆனால், திரைக்கதையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். எனவே, இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. பொதுவாக கிரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள். இப்போது அந்த வரவேற்பு மார்கன் படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

முதல் நாளில் இப்படம் 87 லட்சம் வசூல் செய்திருந்தது. ஆனால், படம் நன்றாக இருப்பதாக டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிடவே இப்படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே, 2வது நாளில் இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. 2வது நாளான நேற்று இப்படம் 1.41 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த 2 நாளில் இப்படம் மொத்தமாக 2.26 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்டுகளை கொடுக்கும் சாசினிக் இணையதளம் பதிவிட்டிருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment