வசூல் ஏறிக்கிட்டே போகுதே!.. வாகை சூடும் மத கஜ ராஜா!.. 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?…

Published on: March 18, 2025
---Advertisement---

Madha Gaja Raja: சினிமா உலகில் எப்போது எந்த படம் வெற்றியடையும் என கணிக்கவே முடியாது. இந்த பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின் அது தள்ளி போய் ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் பாலாவின் வணங்கான் ஆகிய 2 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி வெளியானது. இதில், கேம் சேஞ்சர் படம் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு பேன் இண்டியா படமாக வெளியானதால் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

வணங்கான் வசூல்: ஆனால், இந்த படம் இதுவரை 160 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே, கண்டிப்பாக இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமையும். பாலாவின் வணங்கான் படம் அருண் விஜய்க்கு ஒரு நல்ல படமாக அமைந்து அவருக்கு பேர் வாங்கி கொடுத்திருக்கிறது. பாலாவுக்கு சூப்பர் கம்பேக் இல்லை என்றாலும் படம் ஓரளவுக்கு வசூலை பெற்று வருகிறது.

மதகஜ ராஜா: அந்த நிலையில்தான் கடந்த 10ம் தேதி சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்து உருவான மதகஜ ராஜா படம் வெளியானது. இந்த படம் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு தயாரிப்பாளர் நிதி நெருக்கடியில் சிக்கியதால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அதன்பின் பேசி முடிக்கப்பட்டு இப்போது படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் காமெடி காட்சிகள் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருந்ததால் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனது. பொங்கலுக்கு குடும்பத்துடன் சென்று இரண்டரை மணிநேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்பதால் ரசிகர்கள் இப்படத்திற்கு அதிக ஆதரவை கொடுத்திருக்கிறார்கள்.

பொங்கல் ட்ரீட்: ஒருபக்கம் புளூசட்ட மாறன் போன்ற யுடியூப் விமர்சகர்கள் கூட இப்படத்தை பாராட்ட தியேட்டரில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னை கமலா தியேட்டர் பக்கம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் களைகட்டுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

தமிழகத்தில் படம் வெளியான முதல் நாள் 3 கோடி, 2வது நாள் 3 கோடி என வசூல் செய்த இப்படம் 3வது நாள் 6.2 கோடி வசூல் செய்தது. அதேபோல், 4வது நாளான நேற்று (புதன் கிழமை) இப்படம் 6.50 கோடியை வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. மொத்தத்தில் இப்படம் 4 நாட்களில் 18.70 கோடியை வசூல் செய்திருக்கிறது. எனவே, இந்த பொங்கலுக்கு வெளியான படங்களில் மத கஜ ராஜாவே அதிக வசூலை பெற்ற படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment