---Advertisement---

மணிகண்டனின் ஹாட்ரிக் வெற்றி… அதிகரிக்கும் எண்ணிக்கை… குடும்பஸ்தன் படத்தின் வசூல் நிலவரம்

Published on: March 18, 2025
---Advertisement---

Manikandan: பிரபல நடிகர் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் வேதா திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன். ஆனால் திரைப்படத்தின் வசனகர்த்தாவாகவும் வேலை செய்திருந்தார் என்பது தற்போது அவருடைய பேட்டிகள் மூலம்தான் பலருக்கு தெரிய வருகிறது. சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தில் மணிகண்டனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது. லவ்வர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து குட் நைட் திரைப்படத்திலும் நடித்து வரவேற்பை பெற்றார்.

இரண்டு படங்களுமே சின்ன பட்ஜெட் தான் என்றாலும் வசூலில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக தற்போது அவர் நடிப்பில் மூன்றாவதாக குடும்பஸ்தன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை நக்கலைட்ஸ் யூட்யூப் சேனல் இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், சான்வி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் காட்சியிலிருந்து இப்படத்திற்கு ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் புக் மை ஷோ டிக்கெட் ஆப்பில் 30 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இரண்டாவது நாள் இப்படத்திற்கு அப்படியே இரண்டு மடங்காக 60 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. அந்த வகையில் குடும்பஸ்தன் திரைப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் ஏழு கோடியை தாண்டி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment