Categories: latest news

ஜெட் ஸ்பீடில் அதிகரிக்கும் வசூல்… சண்முக பாண்டியனின் படைத்தலைவன் இரண்டாவது நாள் இத்தனை கோடியா?

Padaithalaivan: சண்முக பாண்டியனின் நடிப்பில் உருவாகி வரும் படைத்தலைவன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது.

கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்து இருக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் முதல் நாள் ஷோவில் இருந்தே இப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் யானை மற்றும் அதன் மஹவுட் இடையேயான உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் சண்முக பாண்டியனின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சண்டை காட்சிகளில் கேப்டனை அசல் எடுப்பது போல நடித்திருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் விஜயகாந்தின் ஏஐ காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஒரிஜினல் விஜயகாந்தை போலவே இருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல் ஷோவில் இருந்தே நல்ல வரவேற்பு அதிகரித்தது. இதனால் படத்தின் காட்சிகளும் நிரம்ப தொடங்கி வருகிறது. அந்த வகையில் முதல் நாள் முடிவில் மொத்தமாக ஒரு கோடியே 29 லட்சம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற விவரம் கசிந்துள்ளது.

தொடர்ந்து இரண்டாம் நாள் வசூலில் 89 லட்சம் வரை வசூல் கிடைத்துள்ளது. மேலும் இதன் தொகை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமாக வசூல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இரவு நேர காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Published by
ராம் சுதன்