Categories: latest news

ஒரே வாரத்தில்.. இந்திய சினிமாவயே வாய பொளக்க வைத்த புஷ்பா 2.. அதிரடி வசூல்!..

புஷ்பா 2 திரைப்படம்:

தெலுங்கு சினிமாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து 2-வது பாகத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்தார்கள். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் விமர்சனம்:

புஷ்பா 2 திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், பல காட்சிகள் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

படத்தின் வசூல்:

இந்த திரைப்படத்தை மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் 600 கோடி பட்ஜெட்டில் எடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே 1000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்பட்டு வந்தது. மேலும் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 294 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு காரணத்தால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தெலுங்கு படமாக எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தி திரையுலகில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. படம் இரண்டாவது நாளில் 449 கோடியும், மூன்றாவது நாளில் 621 கோடியும், நான்காவது நாளில் 829 கோடியும், ஐந்தாவது நாளில் 922 கோடியும், ஆறாவது நாளான நேற்று 1002 கோடியும் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் படம் 7 நாட்களில் ரூபாய் 1055 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கின்றது. இதற்கு முன்பு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அனைத்து திரைப்படங்களின் சாதனையையும் முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. புஷ்பா 2 திரைப்படம் இந்த படத்தின் வசூலை பார்த்த இந்திய சினிமாவே ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றது.

Published by
ramya suresh