ஒரு நடிகர் அல்லது இயக்குனரின் படம் எடுக்கும்போதே அது வெற்றியா தோல்வியா என்பதை கணிக்க முடியாது. சில படங்கள் எடுக்கும்போது ‘இந்த படம் கண்டிப்பாக ஹிட்’ என்றே நினைப்பார்கள். ஆனால், படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது. சில படங்கள் எடுக்கப்படும்போது ‘இந்த படம் ஓடாது’ என இயக்குனரே நினைப்பார்.
ஆனால், படம் சூப்பர் ஹிட் அடித்துவிடும். சினிமாவில் அதை கணிக்கவே முடியாது. வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கிய எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. காதல் கலந்த காமெடி படங்களை எடுப்பதுதான் இவரின் ஸ்டைல்.
சுந்தர்.சி படமென்றால் குடும்பத்தோடு சென்று சிரித்துவிட்டு வரலாம் என்கிற இமேஜை உருவாக்கியதுதான் சுந்தர்.சியின் வெற்றி. இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இவர் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய மதகஜராஜா படம் கடந்த பொங்கலில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்தார். இந்த வெற்றியை சுந்தர்.சி-யே எதிர்பார்க்கவில்லை.
அதேபோல், காமெடி நடிகராக பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிக்க துவங்கி மன்மதன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். ஆனால், திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என சொல்லி நடிக்க துவங்கிவிட்டார். ஆனால், அதில் பல படங்கள் ஓடவில்லை. அந்த நிலையில்தான் அவர் நடித்த மதகஜராஜா படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில்தான் சுந்தர்.சி வடிவேலுவை நம்பி இயக்கி நடித்த கேங்கர்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 11 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேபோல், சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் தோல்வி அடைந்திருக்கிறது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 18 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
ஒரு படம் ஹிட் அடித்துவிட்டதால் சுந்தர்.சியும், சந்தானமும் ஓவர் கான்பிடன்ஸில் நடித்து தோல்வி கொடுத்திருக்கிறார்கள். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் நடிக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…