ஊத்தி மூடிய தக் லைப் கலெக்‌ஷன்!.. 4 நாள் வசூல் இவ்வளவுதானா?!….

Published on: August 8, 2025
---Advertisement---

Thug life: கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மணிரத்னமும் இணைந்து தயாரித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் தக் லைப். நாயகன் படம் வெளியாகி 37 வருடங்கள் கழித்து இவர்கள் ஒன்று சேர்ந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. நாயகன் போல ஒரு படத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு போனார்கள்.

ஆனால், படத்தின் கதை, திரைக்கதையில் அழுத்தமும், சுவாரஸ்யம் இல்லை என நெகட்டிவ் விமர்சனம் வந்தது. படம் நன்றாக இல்லை என்றே பலரும் சொன்னார்கள். முதல் காட்சி முடிந்தவுடனேயே படத்திற்கு அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கியது. ரசிகர்கள் எதிர்பார்த்தது ஒன்று. நடந்தது ஒன்று என மாறிவிட்டது தக் லைப் படத்தின் நிலைமை.

கமலின் கதாபாத்திரமே சரியாக அமைக்கப்படவில்லை. அதோடு, திரிஷா, அபிராமியையும் வீணடித்திருக்கிறார்கள் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். படத்தில் வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. மணிரத்னத்திடம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என கூறினார்கள்.

கடந்த 5ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியானது. கன்னட மொழி பற்றி கமல் பேசியதற்கு சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடகாவில் மட்டும் இப்படம் வெளியாகவில்லை. தக் லைப் படம் முதல் நாளில் 15.5 கோடியும், 2வது நாளில் 7.15 கோடியும், 3வது நாளில் 7.75 கோடியும், 4வது நாளான நேற்று 6.50 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது 4 நாட்களில் இபப்டம் 36.90 கோடி வசூல் செய்திருக்கிறது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் இப்படம் 60 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. வழக்கமாக வியாழக்கிழமை படம் வெளியானால் அந்த வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் வசூல் அதிகமாகவே இருக்கும். ஆனால், படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் வசூல் மொத்தமாக பாதித்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment