வெளிநாடுகளில் காத்து வாங்கும் விடாமுயற்சி!.. இதெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?!...

by சிவா |
வெளிநாடுகளில் காத்து வாங்கும் விடாமுயற்சி!.. இதெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?!...
X

Vidaamuyarchi: அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த விடாமுயற்சி திரைப்படம் ஒருவழியாக நேற்று வெளியாகிவிட்டது. இந்த படத்தின் வேலை கடந்த வருடம் ஜனவரி மாதமே துவங்கியது. லைக்கா நிறுவனத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டு விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிவிக்கப்பட்டார்.

ஹாலிவுட் காப்பி: ஆனால், அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்காமல் போக விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி நியமிக்கப்பட்டார். ஆனால், கதை இதுதான் என உறுதி செய்யவே 6 மாதங்களை எடுத்துக்கொண்டார்கள். மகிழ் திருமேனி சொன்ன கதைகளை வேண்டாம் என சொல்லிவிட்டு ஆங்கில படமான ‘பிரேக் டவுன்’ படத்தை தமிழில் எடுப்போம் என அஜித் சொல்ல மகிழ் திருமேனிக்கு வேறு வழி இல்லாமல் போனது.

ஒரிஜினல் பிரேக் டவுன் கதையில் சில மாற்றங்களை செய்து அசர்பைசான் நாட்டுக்கு போய் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்தார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டு அதன்பின் பிப்ரவரி 6ம் தேதியான நேற்று இப்படம் வெளியானது.

விடாமுயற்சி வசூல்: அஜித்தின் தீவிர ரசிகர்களில் சிலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்படம் முழு திருப்தியாக அமையவில்லை. அதற்கு காரணம் வழக்கமாக அஜித் படங்களில் வரும் மாஸ் காட்சிகள் இந்த படத்தில் இல்லை. எனவே, இப்படம் தமிழ்நாட்டில் 23 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், 2வது நாளான இன்று வசூல் மிகவும் குறைந்துவிட்டது என்கிறார்கள்.

வெளிநாடுகளில் வசூல் பாதிப்பு: ஒருபக்கம், துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு வசூல் இல்லை. அதற்கு காரணம் சென்சாரில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என குறிப்பிட்டுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் இதை கண்டிப்பாக பின்பற்றுவார்கள். அதாவது, 15 வயதுக்கு கீழே உள்ளவர்களை படம் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் குடும்பத்துடன் சென்று விடாமுயற்சி படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு விடாமுயற்சி படம் ஓடும் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு கோடி செலவு செய்து படமெடுப்பவர்கள் இதையெல்லாம் யோசிக்க வேண்டும் என்கிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள்.

Next Story