இன்னும் 50 கோடி கூட வரலயே!... விடாமுயற்சி 3வது நாள் வசூல் இவ்வளவுதானா?!..

by சிவா |
இன்னும் 50 கோடி கூட வரலயே!... விடாமுயற்சி 3வது நாள் வசூல் இவ்வளவுதானா?!..
X

Vidaamuyarchi: லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 6ம் தேதி வெளியான திரைப்படம்தான் விடாமுயற்சி. அஜித்தின் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டதால் அவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்த திரைப்படம் இது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்திருந்தனர்.

மேலும், ஆரவ், ரெஜினி கெஸந்த்ரா உள்ளிட்ட சிலரும் நடித்திருந்தனர். அஜர்பைசான் நாட்டுக்கு சுற்றுலா செல்லும்போது மனைவி திரிஷா கடத்தப்படுகிறார். அவரை அஜித் எப்படி தேடி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பல வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக் இது.

எதிர்மறை விமர்சனம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. படத்தின் கதை, திரைக்கதை அழுத்தமாக இல்லை. சுவாரஸ்யமும் இல்லை. படம் முழுக்க மனைவியை தேடி அஜித் அலைகிறார் என்பது ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது என்றே பலரும் சொன்னார்கள்.

ஆங்கில பட பாணியில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ஏனெனில், அஜித்தை மாஸ் ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு அவர் வில்லன் குரூப்பிடம் அடிவாங்குவது போன்ற காட்சிகள் பிடிக்கவில்லை. எனவே, படத்தை பற்றி பலரும் நெகட்டிவாகவே பேசினார்கள். அதேநேரம், பொதுவான ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவே சொல்லி வருகிறார்கள்.

விடாமுயற்சி வசூல்: ஆனாலும், படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. முதல்நாள் இப்படம் 26 கோடி வசூலை பெற்றது. 2வது நாள் 10.25 கோடி வசூலை மட்டுமே பெற்றது. 3வது நாளான நேற்று (சனிக்கிழமை) 12 கோடி வசூலை பெற்றது. எனவே, இதுவரை மொத்தமாக 47.75 கோடி வசூலை மட்டுமே பெற்றிருக்கிறது. அதாவது படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியும் இப்படம் 50 கோடி வசூலை கூட பெறவில்லை.

இன்று ஞாயிறு என்பதால் ஓரளவுக்கு வசூலை பெற வாய்ப்புண்டு. அதேநேரம் நாளை முதல் விடாமுயற்சி படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இப்படம் மூலம் லைக்கா நிறுவனத்துக்கு 150 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். ஒருபக்கம், விடாமுயற்சி படத்தின் குறைவான வசூல் அடுத்து வெளிவரும் குட் பேட் அக்லி படத்தின் வியாபாரத்தையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

Next Story