2ம் நாளிலேயே கடையை சாத்திய விடாமுயற்சி!.. மொத்த வசூல் இவ்வளவுதானா?!..

by sankaran v |
2ம் நாளிலேயே கடையை சாத்திய விடாமுயற்சி!.. மொத்த வசூல் இவ்வளவுதானா?!..
X

பொங்கலுக்கு வர வேண்டிய படம் விடாமுயற்சி. சில காரணங்களால் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் எங்களுக்கு அஜீத் படம் வரும் நாள்தான் தல பொங்கல், தல தீபாவளி என்றார்கள். அதே போல கடந்த வியாழக்கிழமை படமும் வெளியானது. ரசிகர்கள் பாலாபிஷேகம், பட்டாசு என்று வெடித்து கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். படமோ அப்படி இப்படின்னு சொன்னாங்க.

நெகடிவ் விமர்சனங்கள்: அதுக்கு அப்புறம் தான் தெரியுது. படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்று. கலவையான விமர்சனங்களே வந்தன. படத்துல நிறைய மொக்கை சீன் இருக்கு, மாஸ் ஹீரோவான அஜீத்தை நடிக்க வச்சு இப்படி அடி வாங்க வச்சுட்டாங்களேன்னு நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. முதல் நாளில் ரசிகர்கள் வந்ததால் படத்தின் வசூல் கணிசமாக இருந்தது. அப்புறம் படுத்து விட்டது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் ஹாலிவுட் லெவல் என்றார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் எடுக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அஜீத் படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை லேட் பிக்கப் ஆகுமா என்றும் தெரியவில்லை.

2ம் நாளில் ரொம்பவும் குறைந்து விட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு எப்படி இருக்கு என்பது இனிதான் தெரியும். இப்போது கடந்த 2 நாள்களில் செய்த வசூல் விவரத்தைப் பார்ப்போம்.

2 வது நாள் கலெக்ஷன்: விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் 26 கோடி. 2ம் நாள் வசூல் 8.75 கோடி. மொத்தம் 34.75 கோடி. இந்திய அளவில் தமிழில் மட்டும் 33.9கோடியும், தெலுங்குல மட்டும் 85 லட்சமும் வசூலித்துள்ளன.

விடாமுயற்சியின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் 2வது நாளில் தமிழில் 8.4கோடியும், தெலுங்கில் 35லட்சமும் வசூலித்துள்ளன. மிகவும் எதிர்பார்த்தாலே படம் இப்படித்தான் என்பது விடாமுயற்சியிலும் சரியாகி விட்டது. இப்படியே போனால் கடையை இழுத்து மூட வேண்டியதுதான் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story