Connect with us

ஆமை வேகத்தில் நகரும் விடாமுயற்சி வசூல்… 4வது நாளில் எவ்வளவுன்னு பாருங்க..!

latest news

ஆமை வேகத்தில் நகரும் விடாமுயற்சி வசூல்… 4வது நாளில் எவ்வளவுன்னு பாருங்க..!

விடாமுயற்சி படம் அஜீத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்ததால் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இங்கு அதிகாலை காட்சி இல்லை என்றதால் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குப் படையெடுத்தனர். அதிகாலை காட்சியைப் பார்த்து கொண்டாடினர்.

நெகடிவ் விமர்சனங்கள்: அதன்பிறகு படத்தின் உண்மை நிலவரம் தெரிய ஆரம்பித்தது. படத்தில் முதல் 20 நிமிடங்கள் போர். செகண்ட் ஆப் தான் சுமாராகப் போகிறது. நிறைய பிளாஷ்பேக் தேவையில்லாமல் வருகிறது. அஜீத் அஞ்சாறு கெட்டப்ல வந்தாலும் ஒன்றுதான் நல்லாருக்கு. பைட் சரியில்லை. அஜீத் அடிவாங்குறாரு. அஜர்பைஜான் தேவையில்லை. அங்கு போய் ஏன் சூட்டிங் எடுத்தாங்கன்னு பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தன.

விடாமுயற்சி: லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 61 கோடிக்கு மேல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல் நாளில் மட்டும் 25 கோடி வசூலித்துள்ளது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் படம் இல்லை. அதுவும் சாதாரணமான வேலை நாளில் வெளியான படம். அப்படி இருந்தும் இவ்வளவு ரசிகர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் வந்துள்ளதாகவே தெரிகிறது.

இந்திய அளவில் 4 நாள் வசூல்: படத்தைப் பொருத்தவரை நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தவண்ணம் உள்ளன. அதே நேரம் கலவையான விமர்சனங்களும் வருகின்றன. எது எப்படியோ படத்தின் வசூல் கணிசமாக எட்டினால் சரிதான். விடாமுயற்சி படத்தின் முதல் நாள் 26 கோடியும், 2வது நாள் 10.25 கோடியும், 3வது நாள் 13.5கோடியும், நான்காவது நாள் 13 கோடியும் வசூலித்துள்ளது. மொத்த வசூல் இந்திய அளவில் 62.75கோடி.

இந்தப் படம் முதல் 2 நாள்களில் உலகளவில் 70 கோடியை வசூலித்துள்ளதால் மிக விரைவில் 100 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top