Categories: Cinema News latest news

Ace movie: விஜய்சேதுபதி மார்கெட்டை காவு வாங்கிய ஏஸ்…4 நாட்களில் படத்தின் வசூல் இவ்வளவு தானா?

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிருபித்து வருகிறார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. மகாராஜா மட்டுமே சொல்லிகொள்ளும் வெற்றியை பெற்றது.

Ace movie

இந்த நிலையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் பட இயக்குனர் ஆறுமுக குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியானது கூட பலருக்கும் தெரியவில்லை. அந்த அளவிற்கே இப்படத்தின் வெற்றி அமைந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்தின் வசூல் கூட சொல்லிக்குள்ளும்படி இல்லை.

sacnilk தளத்தின் தகவலின்படி நான்கு நாள் முடிவில் ஏஸ் திரைப்படம் வெறும் 5.9 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இது விஜய் சேதுபதி படஙளிலேயே மிக குறைந்த வசூல் என கூறப்படுகிறது.

Published by
ராம் சுதன்