11வது நாளில் டிராகனின் சூறாவளி வசூல் ஓய்ந்ததா? எத்தனை கோடின்னு பாருங்க...

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. தொடர்ந்து 10 நாள்களாக வசூல் வேட்டையாடிய டிராகன் படத்தின் வசூல் நேற்று தான் கணிசமாகக் குறைந்துள்ளது. 10வது நாளில் இந்திய அளவில் வசூல் 9கோடியாக இருந்தது.
பிளாக்பஸ்டர்: அப்போது தான் முதல் நாள் வசூலான 6.5 கோடியை விட அதிகமாக உச்சத்தைத் தொட்டது. அதே நேரம் உலகளவில் படத்தின் வசூல் 100கோடியைத் தாண்டியது. இது இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபீஸ் கதற கதற 100 கோடி என கெத்தாக அறிவித்தது.
பெருமை: இது தமிழ்சினிமாவுலகிற்கு ஒரு ஆரோக்கியமான விஷயம். ஏன்னா குறைந்த பட்ஜெட்டில் ஒரு நிறைவான படம் என்று பெருமை கொள்ள வேண்டிய விஷயம். அப்படித்தான் 12 ஆண்டுகளாக பெட்டியில் முடங்கிக் கிடந்த மதகஜராஜா படமும் மாஸான ஹிட் கொடுத்தது. படத்தின் நகைச்சுவை தான் பிரதானமாகப் பேசப்பட்டது.

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து கலக்கினார்கள். அதுபோலவே இந்தப் படத்திலும் திரைக்கதை தான் சிறப்பம்சம். குறுக்குவழி தான் இன்று பலரது கண்ணுக்கும் தெரிகிறது. அதில் போனால் எளிதில் முன்னேறி விடலாம். கைநிறைய பணம் சம்பாதிக்கலாம்.
படிப்பில் கோட்டை: பிட் அடித்துப் பாஸ் ஆகலாம் என்று பார்க்கிறார்கள். ஆனால் நேர்வழியில் போனால் கடுமையாக உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும். குறுக்கு வழியில் போனால் தான் நம்மைக் காதலிப்பார்கள் என்று தவறாக நினைக்கும் காதலன் படிப்பில் கோட்டை விடுகிறான். 48 அரியர்ஸில் மாட்டிக் கொண்டு முழிக்கிறான். பிறகு எப்படி அவனுக்கு வேலை கிடைக்கும்.
வேலை செய்து சம்பாதித்தால் தானே காதலியும் கூட இருப்பாள். இந்த விவரம் தெரியாத அவனுக்கு காதலியே நறுக்கென சொல்லிவிட்டு கழன்று விடுகிறாள். மீண்டும் அவன் தன்னை எப்படி எல்லாம் தயார்படுத்திக் கொண்டு என்னென்ன கஷ்டங்கள், வேலைகளை செய்து வாழ்வில் முன்னேறுகிறான் என்பதை படம் அழகாகச் சொல்கிறது.
11வது நாள் வசூல்: கடைசியில் நேர்மைதான் ஜெயிக்கிறது. இந்தக் கதை படம் பார்ப்பவர்களின் வாழ்வியலோடு ஒத்துப் போவதால் படம் மாபெரும் ஹிட்டாகியுள்ளது. அது சரி 11வது நாள் வசூல் விவரம் என்னன்னு தானே கேட்கிறீங்க. 10வது நாள் வசூல் 9 கோடியாக இருந்தது அல்லவா. 11வது நாள் வசூல் 2.25கோடியாகி விட்டது. அவ்ளோதான்.