1. Home
  2. Box office

ஆர்யன், ஆண் பாவம் பொல்லாதது முதல் நாள் வசூல் எவ்வளவு?!.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!...

aaryan

பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். ஆனால் இவருக்கு ராட்சசன் திரைப்படம் ஒரு முக்கிய படமாக அமைந்தது. விஷ்ணு விஷால் மேலும் சில வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் ராட்சசன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த படமாக இப்போதும் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் அமைத்திருந்த கதை, திரைக்கதை.
ராட்சசன் படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

பிரவீன் இயக்கத்தில் ஆர்யன் என்கிற தலைப்பில் உருவான இந்த படம் நேற்று வெளியானது. ராட்சசனை போலவே இந்த படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் சில குறைகள் இருப்பதாக பலரும் சொன்னார்கள். குறிப்பாக ராட்சசன் அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை ஆர்யனில் இல்லை. முதல் அரை மணி நேரம் மட்டுமே சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் ராட்சசன் போல ஆர்யனும் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் என சிலர் சொன்னார்கள். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ஆர்யன் முதல் நாளில் ஒரு கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அடுத்து விஜய் டிவி மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்த ரியோ ராஜ் நடிப்பில் உருவான ஆண் பாவம் பொல்லாதது படமும் நேற்று தமிழகமெங்கும் வெளியானது.இவரின் ஜோ திரைப்படம் ஹிட் படமாக அமைந்ததால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு இந்த படத்தின் டிரைலரை பார்த்தபோது படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என பலரும் நம்பினார்கள். எதிர்பார்த்தது போலவே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த கால ஐடி இளைஞர்களின் காதல், திருமணம், மற்றும் விவாகரத்து ஆகியவற்றை இந்த படத்தில் பேசி இருக்கிறார்கள்.

எனவே ரியோ ராஜுக்கு இந்த படமும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 48 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.