வசூலை அள்ளும் பாகுபலி தி எபிக்.. காலியான ஆர்யன்!.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!...
கடந்த வெள்ளிக்கிழமை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானது. அதில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த க்ரைம் திரில்லர் படமான ஆர்யன், ராஜமவுலி ஏற்கனவே இயக்கி வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டிருந்த பாகுபலி தி எபிக் ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ படம் ஹிட் அடித்த நிலையில் ஆண்பாவம் பொல்லாதது படமும் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படம் ஹிட் அடித்திருந்த நிலையில் அதே பாணியில் கிரைம் திரில்லர் படமாக வெளிவந்த ஆர்யன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன். அவனை பிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி என்கிற வழக்கமான ஒன் லைன் இருந்தாலும், கதை, திரைக்கதையில் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். படத்தில் நிறைய பிளஸ் இருந்தாலும் சில குறைகளும் இருந்தது.
குறிப்பாக படத்தில் வரும் காதல் காட்சிகள் தேவையில்லாத ஒன்று. அதை நீக்கியிருக்கலாம் என பலரும் சொன்னர்கள். மேலும், முதல் 30 நிமிடங்கள், கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்ற கட்சிகள் போர் என பலரும் twitter போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். அதேநேரம் இந்த படத்திற்கு பெரிய ஓபனிங் இல்லை.
இந்நிலையில் படம் வெளியான 2 நாட்களில் இப்படம் 2.74 கோடி வசூல் செய்திருப்பதாக சாஸ்னிக் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே நேரம் பாகுபலி தி எபிக் திரைப்படம் இந்திய அளவில் 18 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. பாகுபலி தி எபிக் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
