வசூலை வாரிக்குவிக்கும் பாகுபலி தி எபிக்!.. 4 நாளில் இவ்வளவு கோடி கலெக்ஷனா?!...
                                    
                                Baahubali The Epic: ராஜமவுலி இயக்கத்தில் 2015ம் வருடம் வெளியான திரைப்படம்தான் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது.
வில்லனின் இடத்தில் பல வருடங்களாக தாயின் காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை உடைத்து அவரை மகன் மீட்கும் எம்.ஜி.அரின் அடிமைப்பெண் பட கதைதான் என்றாலும் இதற்கு ராஜமவுலி அமைத்திருந்த திரைக்கதை மற்றும் விஸ்வல் ஆகியவை ரசிகர்களின் வாயை பிளக்க வைத்தது.

2017ம் வருடம் இப்படத்தில் இரண்டாம் பாகமான பாகுபலி 2 வெளியானது. இந்த படமும் பல மொழிகளிலும் வரவேற்பை பெற்று 1800 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த இரண்டு படங்கள் மூலம் இந்தியாவிலேயே முக்கியமான இயக்குனராக ராஜமவுலி மாறினார். மேலும் பிரபாஸ் ஒரு பேன் இண்டியா நடிகராக உயர்ந்து பல நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறிவிட்டார்.
இந்நிலையில்தான் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் முக்கிய காட்சிகளை ஒன்றாக இணைத்து சுமார் 4 மணி நேரம் ஓடக்கூடிய பாகுபலி தி எபிக் (Baahubali The Epic) என்கிற படத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்கள்.
வெளிநாடுகளிலேயே இப்படம் ஆயிரம் தியேட்டருக்கு மேல் வெளியிடப்பட்டது. இந்தியாவிலும் பல தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 27 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் பார்க்கும்போது இப்படம் 50 கோடி வசூலை தாண்டி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
