ரீ-ரிலீஸிலும் வசூலை அள்ளும் பாகுபலி தி எபிக்!.. முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவு கோடியா!...
தெலுங்கு சினிமா உலகில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் சில படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி படம் இவரை இந்திய அளவில் பிரபலமானது. பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், தமன்னா, ராணா ரகுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட் அடித்து 1700 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இந்திய அளவில் பேன் இண்டியா என்கிற கான்செப்ட்டை பிரபலப்படுத்தியது ராஜமவுலிதான். பாகுபலி 2வின் வெற்றியை பார்த்த பின்னரே தெலுங்கு, கன்னட சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்கும் அந்த ஆசை வந்தது. அதனால்தான் புஷ்பா, கேஜிஎப், புஷ்பா 2, காந்தாரா, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் வெளியானது.
இந்நிலையில்தான் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டையும் இணைத்து பாகுபலி தி எபிக் (Baahubali The Epic) என்கிற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி நேற்று ரிலீஸ் செய்தனர். சுமார் 4 மணி நேரம் ஓடும் இப்படம் வெளிநாடுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. இந்தியாவிலும் கணிசமான தியேட்டர்களில் படம் வெளியானது.

இந்நிலையில், இப்படம் முதல் நாளில் 10.4 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. ஏற்கனவே ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு ரீ-ரிலீஸ் படம் இந்த அளவுக்கு வசூலை பெற்றிருப்பது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
