Bison: இவ்ளோ வசூல் பண்ணாதான் ஹிட்!.. பைசன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!...

பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தென் மாவட்டத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை, அவர்கள் சந்தித்த வலிகளை, கடந்து வந்த போராட்டங்களை தனது திரைப்படங்களில் பதிவு செய்து வருகிறார் மாரி செல்வராஜ்.
இதற்காக அவரின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதற்கு ‘நான் இரு இந்திய பிரஜை. என் அப்பா, தாத்தா கதைகளை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அரசு இருக்கிறது.. சட்டம் இருக்கிறது. சென்சார் இருக்கிறது.. பிடிக்காதவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். ஒரு உண்மையான படைப்புக்கு இப்படி எதிர்ப்பு வரத்தான் செய்யும். அப்படி வரவில்லை எனில் அது படைப்பே இல்லை. சாகும் வரை என் சமூகம் சந்தித்த பிரச்சனைகளை பேசுவேன்’ என பதில் சொல்லியிருக்கிறார்.
துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கிய பைசன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களை பைசன் படத்தில் பதிவு செய்திருக்கிறார் மாரி. மேலும் சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை இப்படம் பேசுகிறது. எனவே, படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 15 கோடி விலைக்கு ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்தால் மட்டுமே அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பைசன் படம் அவ்வளவு வசூல் செய்யுமா என்பது என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
ஒருபக்கம் இப்படம் இதுவரை இன்னும் தெலுங்கில் வெளியாகவில்லை. வருகிற 24-ஆம் தேதி தான் இப்படம் அங்கு வெளியாகவுள்ளது. தெலுங்கில் பைசன் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.