Bison: பைசன் 5 நாள் வசூல் இவ்வளவு கோடியா?!... மாரி செல்வராஜே சொல்லிட்டாரே!...

மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் நடித்து வெளியான திரைப்படம்தான் பைசன் காளமாடன். தென் மாவட்டத்தில் பிறந்து பல தடைகளை தாண்டி கபடி விளையாட்டில் இந்திய அளவில் விளையாடி அர்ஜூனா விருதை பெற்ற மணத்தி கணேசன் என்பவரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை கதையாக எழுதி படமாகி இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
மணத்தி கணேசன் வேடத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார். இந்த படத்திற்காக 3 வருடங்களாக கடுமையான பயிற்சிகளை எடுத்தார் துருவ். அது ஒவ்வொன்றும் திரையில் தெரிகிறது. இந்த படத்தில் துருவ், பசுபதி, அமீர், லால் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
தீபாவளிக்காக பைசன் படம் கடந்த 17ம் தேதி வெளியானது. சாதி வேறுபாடுகளை மறந்து எல்லோரும் சமம் என்கிற கருத்தை இப்படத்தில் மாரி பேசியிருந்தார். அதேநேரம், சில சாதி தலைவர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் என்பவன் சாதியால் பாதிக்கப்பட்டவன். நான் கடைசி வரை சாதியை எதிர்ப்பேன். மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவன் என்கிற முத்திரை என் மீது குத்தப்படும். அந்த முத்திரையை நான் வரவேற்கிறேன். என் படங்களால் சாதிய மோதல் ஏற்படுவதாக சொல்வதை ஏற்க முடியாது. அப்படி எங்கேயும் நடக்கவில்லை என செய்தியாளர் பேசினார் மாரி.
இந்நிலையில், பைசன் திரைப்படம் 5 நாட்களில் 35 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மாரி செல்வராஜுன் இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.