1. Home
  2. Box office

Bison: பாசிட்டிவ் ரிவ்யூ இருந்தும் 10 கோடி கூட வசூல் பண்ணாத பைசன்!... அட பாவமே!..

bison
பைசன் படத்தின் வசூல்

பைசன்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னண், வாழை ஆகிய படங்கள் மூலம் விவாதங்களை துவக்கி வைத்த மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் பைசன். துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் ஆகியோர் முக்கிய இடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தீபாவளிக்காக கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பல தடைகளை மீறி உலக அளவில் கபடி விளையாட்டில் விளையாடி அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், 30 வருடங்களுக்கு முன்பு இரு சாதியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களையும் கலந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

இந்த படத்திற்காக கடந்த 3 வருடங்களாகவே கடுமையான கபடி பயிற்சிகளை துருவ் விக்ரம் எடுத்திருந்தார். அவர் போட்ட உழைப்பு வீண் போகவில்லை என சொல்லுமளவுக்கு பைசன் படத்தில் அவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக அவர் கபடி விளையாடும் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பைசன் திரைப்படம் தீபாவளி மூடுக்கு ஏற்ற படம் இல்லை என்றாலும் இந்த படத்திற்கு மாரி செல்வராஜ் அமைத்திருந்த திரைக்கதையால் படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அதேநேரம் டியூட் படத்தை விரும்பும் ரசிகர்கள் பைசன் படத்தை விரும்ப மாட்டார்கள் என்பதால் இந்த படம் குறைவான வசூலையே பெற்று வருகிறது. படம் வெளியாக 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பைசன் படம் ஆறு கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

அதே நேரம் இன்னும் மூன்று நாட்கள் விடுமுறை இருப்பதாலும், குறைவான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருப்பதாலும் படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் என கணிக்கப்படுகிறது.

கட்டுரையாளர்கள்