1. Home
  2. Box office

2வது வாரத்திலும் குறையாத வசூல்!.. கலெக்‌ஷனை அள்ளும் கேப்டன் பிரபாகரன்!..

2வது வாரத்திலும் குறையாத வசூல்!.. கலெக்‌ஷனை அள்ளும் கேப்டன் பிரபாகரன்!..

Captain Prabakaran: நடிகர் விஜயகாந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரின் கெரியரில் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது கேப்டன் பிரபாகரன். அவரின் நூறாவது படமாக வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. ரஜினிக்கு எப்படி பாட்ஷாவோ அப்படி விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் என்ன சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்றது. சந்தன கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லனாக சித்தரித்து செல்வமணி அமைத்திருந்த கதை, திரைக்கதை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில்தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது இந்த திரைப்படம்தான்.

2வது வாரத்திலும் குறையாத வசூல்!.. கலெக்‌ஷனை அள்ளும் கேப்டன் பிரபாகரன்!..
#image_title

இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.
இந்நிலையில்தான் இந்த திரைப்படம் கடந்த 22ஆம் தேதி தமிழகத்தின் சுமார் 100 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீசானது முதல் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. தினமும் 2 கோடி அளவுக்கு இப்படம் வசூலித்து வருகிறது.

இந்நிலையில் 8வது நாளான நேற்று இப்படம் 2.30 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. படம் வெளியான 8 நாட்களில் இப்படம் 17 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஆறுக்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் வெளியானாலும் கேப்டன் பிரபாகரன் வசூலை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.