
Box Office
Captain Prabhakaran: இரண்டாம் வாரத்தில் கேப்டன் பிரபாகரன்… 7 நாளில் வசூல் இத்தனை கோடியா?
Captain Prabhakaran: விஜயகாந்தின் வெற்றி திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 7 நாளிலேயே படத்தின் வசூல் பல கோடி குவித்து வரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ரி-ரிலீஸ் செய்யப்படும் பிரபல திரைப்படங்கள் சில ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்கள் முன்னர் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆக்ஷன் படங்களால் தனி இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். மற்ற முன்னணி நடிகர்களுக்கு நூறாவது திரைப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.
விஜயகாந்துடன் இணைந்து இப்ராஹிம் ராவுத்தர் இப்படத்தினை தயாரித்தார். அதுவரை தொடர்ந்து 9 படங்களை தோல்வியாக கொடுத்து இருந்தார். இதனால் கேப்டன் பிரபாகரனுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தினை ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். வில்லனாக மன்சூர் அலிகான் அறிமுகம் செய்யப்பட்டார். சரத்குமார், ரம்யாகிருஷ்ணன், ரூபினி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 1991ம் ஆண்டு வெளியான போதே இப்படம் 250 நாட்களுக்கு அதிகமாக ஓடி சாதனை செய்தது.

இந்நிலையில் 22ந் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் 42 லட்சத்தை பெற்றது. இரண்டாம் நாள் வசூல் 86 லட்சம் பெற்றது. ஆனால், மூன்றாம் நாள் 1.3 கோடியாக உயர்ந்தது.
அதை தொடர்ந்து நான்காம் நாள் 1.96 கோடி ரூபாயும், 5ம் நாளில் 2.2 கோடி என தொடர்ந்து அதிகரித்தது. 6ம் நாளில் 2.5 கோடி என இப்படம் இதுவரை 9.24 கோடி வரை தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது 7ம் நாளில் 2.8 கோடி வரை வசூல் குவித்துள்ளது.
இதுவரை கேப்டன் பிரபாகரன் முதல் வாரத்தில் 12.04 கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கிறது. தொடர்ந்து, இரண்டாம் வாரமும் இப்படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரி-ரிலீஸ் படங்கள் கடந்த சில மாதங்களாகவே நல்ல வசூல் குவிப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.