இத்தனை நாளா கூலி படம் எவ்ளோ வசூல் பண்ணிருக்கு? நாள்வாரியாக லிஸ்ட் ரெடி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாகிர், உபேந்திரா, நாகர்ஜூனா, சுருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள படம் கூலி. கடந்த ஆகஸ்டு 14ம் தேதி வெளியானது. படத்திற்கு முதலில் நெகடிவ் மற்றும் கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் கலெக்ஷனை அள்ளியது. முதல் நாளில் இருந்து 18வது நாள் வரை கூலி படம் இந்திய அளவில் எத்தனை கோடி வசூல் செய்தது என பார்க்கலாமா…
sacnilk அறிக்கையின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடி, 2வது நாளில் 54.75 கோடி, 3வது நாளில் 39.5கோடி, 4வது நாளில் 35.25கோடி, 5வது நாளில் 12கோடி, 6வது நாளில் 9.5கோடி, 7வது நாளில் 7.5கோடி, 8வது நாளில் 6.15 கோடி வகூலித்தது. அந்த வகையில் முதல் வார கலெக்ஷன் 229.65 கோடியாக இருந்தது.
தொடர்ந்து 9வது நாளில் 5.85கோடி, 10வது நாளில் 10.5கோடி, 11வது நாளில் 11.35கோடி, 12வது நாளில் 3.25கோடி, 13வது நாளில் 3.65கோடி, 14வது நாளில் 4.85கோடி என வசூலித்தது. 15வது நாளில் 2.4கோடி. ஆக 2வது வாரத்தில் மட்டும் 41.85கோடியை வசூலித்தது. 16வது நாளில் 1.7கோடி, 17வது நாளில் 2.8கோடி, 18வது நாளில் 3கோடி என வசூலித்தது.
ஆக இதுவரை மொத்தமாக 279கோடியை இந்தியாவில் மட்டும் வசூலித்துள்ளது. உலகளவில் இதன் வசூல் 16வது நாளிலேயே 500 கோடியைக் கடந்துள்ளது. படத்தின் பட்ஜெட் 350 முதல் 400கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிக்கு இப்போது 74 வயசு. இந்த வயதிலும் இவ்ளோ கலெக்ஷனை அள்ளி இருக்கிறார்னா பெரிய விஷயம்தானே.
