ஆந்திராவிலும் ரஜினிதான் நம்பர் ஒன்!.. வசூலை வாரிக்குவித்த கூலி!.. செம அப்டேட்!..
Coolie: தமிழ் சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு. எப்படி எனில் 80ளிலேயே தெலுங்கில் உருவான படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகி ஹிட் அடிக்கும். விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐபிஎஸ், டாக்டர் ராஜசேகரனின் இதுதான்டா போலீஸ் மற்றும் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களும் தமிழிலில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதேபோல் அம்மன், அருந்ததி, பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா 2 என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது
அதேபோல் தமிழ் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. குறிப்பாக தனுஷ், விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் படங்களும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று வருகிறது. ரஜினி எப்போது சூப்பர்ஸ்டாராக மாறினாரோ அப்போது முதலே அவரின் எல்லா படங்களுக்கும் ஆந்திராவில் நல்ல வசூலை பெற்று வருகிறது. அது இப்போது வரை குறையவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்து கடந்த 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் உள்ள பல தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் இப்படம் தெலுங்கு வெர்ஷனில் கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
அதாவது தெலுங்கு மாநிலங்களில் இப்படம் 63.8 கோடியையும் வட அமெரிக்காவில் தெலுங்கு வெர்ஷனில் 16.1 கோடியையும் வசூல் செய்திருக்கிறது. இந்திய அளவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத அளவு தெலுங்கு சினிமா ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதற்கு இந்த படத்தில் நாகார்ஜுனா நடித்திருந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் தெலுங்கு வெர்ஷனில் இவ்வளவு வசூலை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூலி திரைப்படம் 130 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலக அளவில் 500 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.
