ரெக்கார்ட் பிரேக் செய்த கூலி!.. முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவு கோடியா?…
Coolie Collection: ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கூலி திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் சுமார் 7000 தியேட்டர்களில் வெளியானது. தமிழகத்தில் சுமார் 700 தியேட்டர்களில் கூலி படம் வெளியானது. கடந்த 8ம் தேதி படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்தார்கள். டிக்கெட் முன்பதிவிலேயே இப்படம் 100 கோடியை நெருங்கி விட்டதாக மூவி ட்ராக்கர்ஸ் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.
இதுவரை எந்த தமிழ் சினிமாவிற்கும் டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என சொல்லும் அளவுக்கு கூலி படம் பெரிய சாதனைகளை செய்தது. கேரளாவில் முன்பதிவிலேயே 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழகத்திலும் 15 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் மொத்தமாக முன்பதிவில் கூலி படம் எவ்வளவு வசூலை அள்ளியது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 18.90 கோடி வசூல் ஆகியுள்ளது. இந்திய அளவில் மொத்தமாக 55.5 கோடியும், வெளிநாடுகளில் 57.75 கோடியும் முன்பதிவில் வசூலாகி உள்ளது. மொத்தத்தில் உலக அளவில் டிக்கெட் முன்பதிவில் கூலி திரைப்படம் 112.80 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ரிலீசுக்கு முன்பு கூலி திரைப்படம் முன்பதிவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட இதையே படத்தின் முதல் நாள் வசூலாகவும் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் இன்று வெளியாகியுள்ள கூலி திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. நாளை ஆகஸ்ட் 15ஐ தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறைகள் வருவதால் இப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.
