ஆசையா வாங்கி கையை கடிச்சிடுச்சே!.. கூலி படத்தால் வந்த நஷ்டம்.. 1000 கோடி வாய்ப்பே இல்ல!..
Coolie: கூலி திரைப்படம் எப்போது வெளியானதோ அது முதலே அந்த படம் பற்றிய செய்திகளைத்தான் சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. பல ஊடகங்களிலும் பலரும் இந்த படம் பற்றிய பேசுகிறார்கள். ஒரு பக்கம் கூலி படம் எதிர்கொண்ட நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி பலரும், ஒருபக்கம் கூலி படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பற்றியும் பலரும் பேசி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூலி படம் 150 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின் சன் பிக்சர்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
கூலி திரைப்படம் கடந்த 4 நாட்களில் 370 கோடி வரை வசூல் செய்து விட்டதாக மூவி டிராக்கர்ஸ் பலரும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். கூலி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 97.5 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் இப்படம் 300 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கூலி படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் குழந்தைகளோடு படத்தை பார்க்க முடியாமல் பலரும் தவிர்த்தனர். ஒரு பக்கம் படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தனி தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. அதேநேரம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாகவே படம் ஓடி வருகிறது.
ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு வினியோக உரிமையை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனம் வாங்கியது. வேறு சில 2 விநியோகஸ்தர்கள் 70 முதல் 75 கோடி வரை கொடுக்க முன்வந்த நிலையில் ஹம்சினி நிறுவனம் 87 கோடி கொடுத்து கூலியின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கி இருக்கிறது. படம் A சான்றிதழை பெற்றதால் குடும்பத்துடன் படம் பார்க்க ரசிகர்கள் வருவது கொஞ்சம் குறைந்ததால் வசூல் பாதித்திருக்கிறது.
இதனால் 10 முதல் 15 கோடி வரை அந்நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் சொல்கிறது. அதேபோல் கேரளாவில் கூலி படம் வெளியான அன்று பல மாவட்டங்களிலும் கனத்த மழை பெய்தது. அதோடு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்ததால் கேரளாவிலும் கூலி படத்தின் வசூல் கணிசமாக பாதித்திருக்கிறது.
