500 கோடி வசூலுக்கே திணறிய கூலி!… சைலண்ட் மோடில் சன் பிக்சர்ஸ்.. என்ன நடக்குது?..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 14 ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் கூலி. ஜெய்லரை போலவே வசூலை அள்ள வேண்டும் என்கிற ஆசையில் நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, அமீர்கான் என பல மொழிகளில் இருந்தும் பல நடிகர்களை கொண்டு வந்து நடிக்க வைத்தார்கள்.
மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்களும் ஹைப்பை ஏற்படுத்தியது. லோகேஷ் கனகராஜும் ரஜினியும் முதன்முறையாக இணைந்ததால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதேநேரம் படம் வெளியான அன்றே இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது. லாஜிக் இல்லை, தெளிவான கதை திரைக்கதை இல்லை என்றெல்லாம் பலரும் பேசினார்கள். பல விமர்சனங்களும் படத்திற்கு எதிராக இருந்தது. அதே நேரம் அது இப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை.
படம் வெளியான நான்கு நாட்களில் 404 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆனால் அப்படி அறிவித்து அடுத்து 8 நாட்கள் ஆன நிலையில் இப்போது வரை வசூலை பற்றி எந்த அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் வெளியிடவில்லை. படம் வெளியாகி நான்கு நாட்களுக்குப் பின் அதாவது ஆகஸ்ட் 18ம் தேதிக்குப் பின் கூலி படத்திற்கு தியேட்டர்களில் வசூல் குறைய தொடங்கியது. அதிலும் மல்டிபிளக்ஸ் அல்லாத தனி தியேட்டர்களில் வசூல் சுத்தமாகவே குறைந்து போனது.
நான்கு நாட்களில் 404 கோடியை வசூல் செய்த கூலி அடுத்த 100 கோடியை தொட 8 நாட்கள் ஆனது. தற்போது படம் 500 கோடி வசூலை தொட்டு விட்டதாக சிலர் சொல்கிறார்கள். மேலும் 2.O, ஜெயிலர், கூலி என மூன்று 500 கோடி வசூல் படங்களை கொடுத்த ஒரே நடிகர் ரஜினி எனவும் அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால் 500 கோடியை இன்னும் கூலி தொடவில்லை. 460 முதல் 480 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. 500 கோடி வசூல் செய்து விட்டதாக வரும் தகவல் போலியானது என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.
