ஜெயிலர் வசூலில் பாதி கூட வரலயே!… இவ்வளவு பில்ட்ப் செஞ்சும் ஒன்னும் இல்லாம போச்சே!….
Coolie: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் கூலி. லோகேஷ் ரஜினியை வைத்து படம் இயக்கியதால் இப்படத்தின் மீது பெரிய ஹைப் உருவானது. அதோடு நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, அமீர்கான் போன்ற பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டதும் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகரித்தது. ஒருபக்கம் அனிருத் தனது பாடல்கள் மூலம் இப்படத்திற்கு இன்னும் ஹைப் ஏற்றினார். இப்படத்தின் சிட்டுக்கு.. மோனிகா.. பவர் ஹவுஸ் ஆகிய மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. அதிலும் மோனிகா பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டார்கள்.
கடந்த 14ம் தேதி படம் வெளியானவுடன் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. படத்தில் கதை, திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை நாகார்ஜுனா ஸ்டைலாக இருந்தாலும் அவரைவிட சவுபின் சாஹிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள்.. நிறைய கேள்விகள் வருகிறது.. எதற்கும் பதில் இல்லை.. பெரும்பாலான காட்சிகளை யூகிக்க முடிகிறது.. கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எழுதி இருக்கலாம் என்றெல்லாம் விமர்சகர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பேசினார்கள்.
அதேநேரம் அதிக எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் வசூல் பாதிக்கவில்லை. முன்பதிவிலேயே உலகம் முழுவதும் 110 கோடி வரை வசூல் செய்தது. அதேபோல் முதல் நாள் வசூல் 150 கோடி என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்த மூன்று நாட்களும் பல தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஆனது. அதே நேரம் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் பி.வி.ஆர், ஐநாக்ஸ் போன்ற தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆனாலும் தனி தியேட்டர்களில் வசூல் கொஞ்சம் குறைந்தது.
இந்நிலையில்தான் கூலி படம் 400 கோடி வசூல் செய்யிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. 350 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள். ஒரு பக்கம் கூலி திரைப்படம் ஜெயிலர் வசூலை தாண்டுமா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி வசூல் செய்தது. ஆனால் கூலியோ படம் வெளியாகி 5 நாட்களில் 100 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
இன்னும் 4 நாட்களுக்கு பெரிதாக வசூல் இருக்காது. அதேநேரம் வார இறுதியான சனி, ஞாயிறுகளில் ஓரளவுக்கு வசூல் வரும். அப்படி வந்தாலும் ஜெயிலர் படத்தின் 200 கோடி வசூலை தமிழ்நாட்டில் கூலி படம் தொடுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக 606 கோடி வரை வசூல் செய்தது. ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி பேசியது பெரிய ஹைப்பை உருவாக்கியது. அதுவே அந்த படத்திற்கு பெரிய புரமோஷனாகவும் அமைந்தது.
கூலி படத்திலும் இந்த மேஜிக் நடந்து 1000 கோடி வரை வசூலாகும் என எல்லோரும் நினைத்தார்கள். கூலி பட விழாவில் ரஜினியும் நன்றாகவே பேசினார். அதே நேரம் வெளிநாடுகளில் வசூல் செய்த அளவுக்கு கூட தமிழ்நாட்டில் கூலி படம் வசூல் செய்யவில்லை. கூலி திரைப்படம் ஜெயிலர் வசூலை தாண்டுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.
