சக்கை போடு போடு ராஜா... டிராகன் படத்தின் 5வது நாள் வசூல்... அடேங்கப்பா இத்தனை கோடியா?

'சக்கை போடு போடுராஜா உன் காட்டுல மழை பெய்யுது'ன்னு ஒரு பழைய சிவாஜி பாடல் வரும். அப்படித்தான் டிராகனும் உள்ளது. நாளுக்கு நாள் வசூல் எகிறிக்கொண்டே போகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன்.
தனிச்சிறப்பு: இது கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் மாஸாக இருந்தது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் தனிச்சிறப்பு. இதுதான் வெற்றிக்கும் காரணம்.
வசூல் அள்ளுகிறது: தனுஷ் படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு டிராகன் முந்திக் கொண்டது. இரண்டு படங்களும் ஒரே நாளில்தான் ரிலீஸ். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வசூல். இந்தப் படத்தின் திரைக்கதை அம்சம்தான் அதற்குக் காரணம். இளைஞர்களைக் குறி வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வசூல் அள்ளுகிறது.
படத்தின் கதை: குறுக்கு வழியில் போனால் வாழ்வில் எளிதில் முன்னேறி விடலாம் என நினைக்கிறான் ஹீரோ. கடைசியில் அவன் தேர்ந்தெடுப்பது எந்த வழி என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நடக்கும் சில சம்பவங்கள் நமது வாழ்க்கையில் எப்போதோ நடந்தது போல இருக்கும். இதுதான் ரசிகர்களைக் கவரக் காரணம். இந்தப்படத்தின் வசூல் என்னன்னு பார்க்கலாமா...
5 நாள் வசூல்: இந்திய அளவில் முதல்நாளில் 6.5கோடி, 2வது நாள் 10.8கோடி, 3வது நாள் 12.75கோடி, 4வது நாள் 5.75கோடி, 5வது நாள் 4.75 கோடி ஆக மொத்தம் 40.50கோடி. உலகளவில் இதன் வசூல் 60 கோடியை நெருங்கியுள்ளது. இந்த ஆண்டின் டாப் ஓபனிங் டே வசூலில் விடாமுயற்சிக்குப் பிறகு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் நாளில் உலகளவில் விடாமுயற்சி 48கோடி வசூல். டிராகன் 11.2கோடி வசூல். அப்படிப் பார்க்கும்போது டிராகன்தான் இந்த லிஸ்டில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.