Dragaon:டிராகன் படத்தின் 2வது நாள் கலெக்ஷன் அள்ளிடுச்சே...! இத்தனை கோடியா?

தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துடன் நேற்று முன்தினம் வெளியானது டிராகன். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ள படம் டிராகன். லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். முதலில் கோமாளி படத்தில் நடித்தார் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படம் வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரது படங்களுக்கு தமிழ்சினிமா உலகில் மவுசு அதிகரித்து விட்டது.
ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பர் படம். வேற லெவல். புதுசா, குவாலிட்டியா இருக்கு. பக்கா காமெடி என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள். படத்திற்கு முதல் ஆளாக நான் விமர்சனம் சொல்றேன்னு சிம்பு இது பிளாக் பஸ்டர் மூவின்னு சொல்லிட்டாராம்.
பாசிடிவான விமர்சனங்கள்: படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படம் தனுஷ் இயக்கிய படத்தை விட வசூலில் பல மடங்கு முந்தியுள்ளது. முதல் நாளில் படம் பார்த்த ரசிகர்களின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து 2ம் நாள் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வசூலும் எகிறியுள்ளது.
2 நாள் வசூல் விவரம்: அந்த வகையில் இன்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். வசூலும் அதிகமாக இருக்கும் என்று எண்ணப்படுகிறது. படத்தின் 2 நாள் வசூல் விவவரம் என்னன்னு பாருங்க. படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 6.5 கோடி. 2ம் நாள் வசூல் 10.25கோடி. மொத்தம் 16.75 கோடி வசூல்.
அந்த வகையில் முதல் நாள் வசூலைக் காட்டிலும் 2வது நாள் வசூலை விட மாஸ் காட்டியுள்ளது. இதற்குக் காரணம் படத்திற்குக் கிடைத்த ரசிகர்களின் வரவேற்புதான். படத்தின் வசூல் வரும் நாள்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.