வசூல் ஏறிகிட்டே போகுதே!.. பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பும் டிராகன்!....

Dragon Movie: ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம்தான் டிராகன். இரண்டு பேருமே இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் என்பதால் கல்லூரி வாழ்க்கை மற்றும் அதன்பின் வேலை தேடி அலையும் போது சந்திக்கும் பிரச்சனைகளை பேசியிருக்கிறார்கள்.
இரண்டாவது வாய்ப்பு: ஆனால், இதை சீரியஸாக அணுகாமல் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அஸ்வத். ஓ மை கடவுளே படம் போலவே ஒருவனுக்கு தனது தவறை திருத்திக்கொள்ள இரண்டாவது வாய்ப்பு என்கிற கான்செப்டை இந்த படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
பாசிட்டிவ் ரிவ்யூ: இந்த படம் வெளியாகி முதல் காட்சி முடிந்த உடனேயே படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. அடுத்தடுத்து படம் பார்த்த எல்லோருமே படம் நன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். இதனால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்தது. அஜித்தின் விடாமுயற்சி படத்தை விட டிராகன் படத்திற்கு அதிக டிக்கெட் புக்கிங் இருந்ததாக தியேட்டர் அதிபர்களே சொன்னார்கள்.
மேலும், நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் என் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் டிராகன் படம் என டிவிட்டரில் கூறியிருந்தார் அஸ்வத்.
டிராகன் வசூல்: இந்த படம் வெளியான முதல் நாள் 6.5 கோடி வசூலை பெற்றது. அடுத்த நாள், அதாவது சனிக்கிழமை வசூல் அதிகரித்து 10.8 கோடி வசூலை அள்ளியது. 3வது நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று இப்படம் 11.50 கோடியை வசூல் செய்து அசத்தியிருக்கிறது. இதன் மூலம் படம் வெளியாகி 3 நாட்களில் 28.80 கோடியை வசூல் செய்திருக்கிறது.
படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ வந்து கொண்டே இருப்பதால் இந்த வார இறுதி வரை டிராகன் படம் நல்ல வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது. அதேநேரம், தனுஷின் இயக்கத்தில் வெளியாகி டிராகன் படத்தோடு போட்டி போட்டு வந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் 3 நாட்கள் வெறும் 4.31 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.