1. Home
  2. Box office

Dude: 100 கோடியை நெருங்கும் டியூட்!.. 4 நாள் வசூல் என்ன தெரியுமா?!...

dude

டியூட் வசூல்


பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே, டிராகன் ஆகிய 2 படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டியூட் படமும் அவருக்கு ஹிட் கொடுத்திருக்கிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதனின் படங்கள் குறைவான பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை தருகின்றன. எனவே, அவரை வைத்து படமெடுக்க பலரும் ஆசைப்படுகிறார்கள். அதோடு, பாக்கியராஜ், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் மூன்றும் கலந்த கலவையாக பிரதீப் இருப்பதால் இளைஞர்கள் அவரை விரும்புகின்றனர். Gen Z  என சொல்லப்படும் 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கு பிடித்த நடிகராக மாறியிருக்கிறார் பிரதீப்.

சாதியவாதிகளுக்கும், பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கும் எதிரான ஒன்றை கமர்ஷியல் சினிமாவில் டீல் செய்திருக்கிறார்கள். பிரேமலு படம் முலம் இளசுகளின் கனவு கன்னியாக மாறியிருக்கும் மமிதா பைஜூ படத்திற்கு பெரிய பிளஸ்ஸாக இருக்கிறார். சாய் அபயங்கரின் இசை இளம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

ஒருபுறம் பைசன், டீசல் போன்ற படங்கள் வெளியாகியிருந்தாலும் கமர்ஷியல் சினிமாவை விரும்பும் ரசிகர்களின் தேர்வு டியூட் படமாகவே இருக்கிறது. எனவே, டியூட் படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. படம் வெளியான 3 நாட்களில் உலகமெங்கும் 66 கோடி வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், 4வது நாளான நேற்று இப்படம் இந்தியாவில் 10 கோடி வரை வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். வெளிநாடுகளில் அதே தொகையை வசூல் செய்திருந்தால் மொத்த வசூல் 80 கோடியை தாண்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இன்னும் ஒரு நாளில் 100 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரையாளர்கள்