Dude: இந்த வருஷ தீபாவளி பிரதீப்புக்குதான்!.. டியூட் 5 நாள் கலெக்ஷன் வேறலெவல்!..

பொதுவாக தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்களுக்கு உற்சாகம்தான். ஏனெனில் நிறைய புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும். அதுவும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகையின் படங்கள் வெளியானால் சொல்லவே தேவையில்லை. ஆனால் இந்த வருடத்தை பொருத்தவரை தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிரதீப் ரங்கநாதன் டியூட், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்த பைசன், ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பிரதீப் ரங்கநாதன் பொறுத்தவரை ஏற்கனவே லவ் டுடே, டிராகன் என இரண்டு சூப்பர் ஹிட்களை கொடுத்திருந்ததால் டியூட் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இளைஞர்கள்தான் பிரதீப் ரங்கநாதனின் டார்கெட் என்பதால் அவர்களுக்கு பிடித்தது போல கதை திரைக்கதையை உருவாக்கி இருந்தார் படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். அவர்களின் கணிப்பு தவறவில்லை. படம் வெளியான முதல் நாளிலிருந்து டியூட் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் 83 கோடி வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டி இருக்கலாம் என்பது கணிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இன்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிபபி மைத்ரி மூவிஸ் நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டியூட் திரைப்படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டுமே 60 கோடி வசூலை தாண்டி விட்டது. ஓவர் சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளிலும் இப்படம் 40 கோடி வரை வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.