காதல் படங்களை விட கெத்து காட்டிய பெருசு... முதல் நாள் வசூல் எவ்வளவு?

ரசிகர்கள் இப்ப எல்லாம் ரொம்பவே மாறிட்டாங்க. பழைய கதை, மொக்கை கதை, தழுவல் கதையை எல்லாம் எடுத்து அவங்களை ஏமாத்த முடியாது. புதுசா சிந்திக்கிறவங்களுக்குத் தான் அவங்களோட சப்போர்ட் எப்பவும் இருக்கும். அதனால இப்ப வர்ற இளம் இயக்குனர்களும் அவங்களுக்கு ஏத்த மாதிரி வித்தியாசமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி எடுக்குறப் படங்கள்தான் வசூலை வாரிக் குவிக்கும் என்பதை இந்த வாரமும் நிரூபிச்சிட்டாங்க.
நேற்று திரையரங்குகளில் ஸ்வீட் ஹார்ட், கொஞ்சம் மோதல் கொஞ்சம் காதல், பெருசு உள்பட பல படங்கள் வெளியாகின. இந்தப் படங்களில் பெருசு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.
படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தாலும் கூட துளியும் விரசம் இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம். இவர் ஒரு சின்ன கதையை வச்சிக்கிட்டு படம் முழுக்க கலகலப்பாக எடுத்து இருக்கிறார். பெண்களும், குடும்பத்தினரும் பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் சிறப்பு. அந்த வகையில் பெருசு படத்தைப் பார்த்த ரசிகர்கள் எல்லாருமே படம் சூப்பரா ஜாலியா காமெடியா போகுது. என்ஜாய் பண்ணி பாருங்க. ஆபாசமோ, ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளோ படத்தில் இல்லை.
படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஷ்காந்த், தீபா ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் மனதை டச் செய்து வருகிறது. அந்த வகையில் படத்தில் காமெடி மட்டும் இல்லாமல் எமோஷனலாகவும் உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் இதை சிறந்த ஃபீல் குட் படம் என்கிறார்கள். அவர்கள் சொன்னதுக்கு ஏற்ப படமும் வசூலில் முந்திக் கொண்டுள்ளது. நேற்று வெளியான காதல் படங்களை விட வசூலில் பெருசு தான் பெருசாக சாதித்துள்ளது. வாங்க பார்க்கலாம்.
ஸ்வீட் ஹார்ட் படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 35 லட்சம். பெருசு படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இந்திய அளவில் 53 லட்சம்.