ஒரு வாரத்தில் ஊத்தி மூடிய கேம் சேஞ்சர்.. வசூலை அள்ளும் மதகஜராஜா!.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..
Game Changer: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்ய, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து சுமர் 450 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம்தான் கேம் சேஞ்சர். கொரோனா லாக்டவுன் இருந்தபோது கார்த்திக் சுப்பராஜ் எழுதிய இந்த கதை ஷங்கரிடம் கொடுக்கப்பட்டது.
மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த கதையை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருந்தார். தில், தூள், கில்லி போல ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஷங்கருக்கு இந்த கதை பிடித்திருக்கவே இப்படத்தை துவங்கினார். தெலுங்கில் முக்கிய தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரித்திருந்தார்.
கேம் சேஞ்சர்: 450 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக சொல்லப்படுகிறது. அதிலும், 5 பாடல்களுக்கு மட்டுமே 80 கோடி வரை செலவு செய்யப்பட்டது. அதில் லைரானா பாடலுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்து நியூஸ்லாந்து போய் எடுத்தார் ஷங்கர். ஆனால், நீளம் கருதி அந்த பாடல் படத்தில் வைக்கப்படவில்லை.
கேம் சேஞ்சர் வசூல்: அப்படி வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வழக்கமான தெலுங்கு படம் போல இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கலாம். நிறைய காட்சிகளில் லாஜிக் இல்லை. 20 நிமிடம் வரும் பிளாஷ்பேக் காட்சி மட்டுமே நன்றாக இருக்கிறது என சொன்னார்கள். படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 117.98 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 7வது நாளான நேற்று இப்படம் 4.75 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது.
மதகஜராஜா: ஒருபக்கம் சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்றிருக்கிறது. சென்னையில் இப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. படம் வெளியான முதல் இரண்டு நாள் தலா 3 கோடியை வசூல் செய்தது இப்படம். அதன்பின் படம் நன்றாக இருக்கிறது என விமர்சனங்கள் வரவே வசூல் அதிகரித்தது.
3வது நாள் 6.2 கோடி, 4வது நாள் 6.8 கோடி, 5வது நாளான நேற்று 6 கோடி என 5 நாட்களில் இப்படம் 25 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இன்னும் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இப்படம் இன்னமும் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பு குறைவான பட்ஜெட்டில் உருவான படம் என்பதால் கண்டிப்பாக இப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும் என்றே கணிக்கப்படுகிறது.