பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய ஐடென்டிட்டி!.. மூணு நாளுக்கு சேர்த்தே இவ்வளவுதான் வசூலா?..

by Ramya |   ( Updated:2025-01-04 14:59:39  )
identity
X

identity

ஐடென்டிட்டி: 2025 ஆம் ஆண்டு தொடங்கியதும் தென்னிந்திய சினிமாவில் முதன்முதலாக ரிலீசான திரைப்படம் ஐடென்டிட்டி. இது ஒரு மலையாள திரைப்படமாக இருந்தாலும் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கிரைம் ட்ரில்லர் திரைப்படமாக வெளியாகி இருந்த நிலையில் படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

நடிகர்கள்: மலையாள இயக்குனர் அகில் பால் இயக்கத்தில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படம் கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் மொழியிலும் இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

படத்தின் கதை: இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருந்தது. மலையாள இயக்குனர்கள் இது போன்ற திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர்கள். முதலில் இந்த திரைப்படத்தில் ஒரு கடையில் ரூமில் ஒரு பெண் ஆடை மாற்றி வருகின்றார். அதை வீடியோவாக எடுக்கும் ஒரு நபர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றார். பின்னர் கொஞ்சம் நாட்களில் அந்த நபரை ஒருவர் கொலை செய்து விடுகின்றார்.

இதனை நடிகை திரிஷா நேரில் பார்த்து விடுகின்றார். அதை தொடர்ந்து அவருக்கும் லாரி மோதி ஃபேஸ் பிளான்ட் என்கின்ற பாதிப்பை ஏற்பட்டு வருகின்றது. இருப்பினும் அந்த நபரின் முகம் மட்டும் ஞாபகம் இருக்க அதனை டொவினோ படமாக வரைகின்றார். ஆனால் படத்தை வரைந்து முடித்த பிறகு பார்த்தால் டொவினோவின் முகமே அதில் வந்து விடுகின்றது. இந்த கேசை நடத்தி வரும் வினய் அதிர்ச்சி அடைகின்றார். யார் இந்த கொலையை செய்தது என்பதை கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை.


படத்தின் ரிவ்யூ: படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் முதல் பாதி மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இரண்டாவது பாதி ஆக்சன் காட்சிகளால் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இரண்டாம் பாதியில் படத்தின் கதை எங்கே நகர்கின்றது என்பதே தெரியாதது போல் இருப்பது சற்று தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றது. படத்தில் வரும் அனைவருமே குழப்பத்துடனே காணப்படுகிறார்கள். எது எப்படியோ படம் ஒரு திரில்லர் படமாக இருக்கின்றது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

படத்தின் வசூல்: படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் 1.18 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 1.11 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. 3ம் நாளான இன்று 1 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது. மொத்தம் இந்த திரைப்படம் நான்கு கோடி ரூபாய் இந்திய அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. வரும் நாட்கள் வார இறுதி நாட்கள் என்பதால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

Next Story