Connect with us
idli kadai

Box Office

Idli kadai: தனுஷோட சம்பளம் கூட வரலேயே!. ஊத்தி மூடிய இட்லி கடை!.. 3 நாள் வசூல் நிலவரம்…

Idli kadai: தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. ஏற்கனவே பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கிய தனுஷுக்கு இது இயக்கத்தில் 4வது திரைப்படம். சின்ன வயதில் தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் வசிக்கும் போது அங்கிருந்த இட்லி கடை, அவர் பார்த்து ரசித்த மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை ஆகியவற்றில் கொஞ்சம் கற்பனை கலந்து இட்லிக்கடை படத்தை உருவாக்கி இருக்கிறார் தனுஷ்.

இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய தனுஷ் ‘சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்த இட்லி கடையில் சாப்பிட மிகவும் ஆசைப்படுவேன். ஆனால் கையில் பணம் இருக்காது. எனவே என் சகோதரிகளுடன் இணைந்து வயலில் வேலை செய்து பூ பறித்து அதில் வரும் பணத்தில் நாங்கள் எல்லாம் அந்த கடைக்கு போய் இட்லி சாப்பிடுவோம்’ என்று தனது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.

இட்லி கடை திரைப்படத்தை ஒரு ஃபீல் குட் திரைப்படமாக உருவாக்கி இருந்தார் தனுஷ். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும், பின்னணி செய்யும் சிறப்பாக இருந்தது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஏனோ இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இப்போதுள்ள இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம், இந்த படத்தை பார்க்கும் இளைஞர்களுக்கு அவர்களின் அப்பாக்களை மதிக்கும் எண்ணம் வரும் என்றெல்லாம் படம் பார்த்தவர்கள் பேசினார்கள். ஆனாலும் இது வசூலில் எதிரொலிக்கவில்லை.

கரூரில் நடந்த சம்பவம், படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்கிற விமர்சனம், யூகிக்க கூடிய காட்சிகள் மற்றும் திரைக்கதை, காந்தாரா 2வுக்கு செல்லும் கூட்டம் உள்ளிட்ட சில காரணங்களால் பெரும்பாலான ஊர்களில் இட்லி கடை ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களில் காத்து வாங்குகிறது.
முதல் நாள் இப்படம் 11 கோடி மட்டுமே வசூல் செய்தது. 2ம் நாளான வியாழக்கிழமை இப்படம் 9.75 கோடி வசூல் செய்தது. மூன்றாம் நாளான நேற்று இப்படம் 5.5 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதாவது படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இட்லி கடை திரைப்படம் இதுவரை 26 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

தனுஷ் 40 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர். அப்படி கணக்கிட்டால் இந்த படம் அவரின் சம்பளத்தை கூட இட்லி கடை வசூல் செய்யுமா என்பது தெரியவில்லை. தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துவிட்ட நிலையில் இட்லி கடை தோல்வி படமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Box Office

To Top