ரஜினி பட நடிகரின் படத்தை காலி செய்த கேப்டன் பிரபாகரன்!.. டோட்டல் வாஷ் அவுட்!..
Indra Movie: விஜயகாந்தின் 100வது படமாக 1991ம் வருடம் வெளிவந்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன். ஹாலிவுட் ரேஞ்சில் பக்கா ஆக்சன் படமாக வெளிவந்த கேப்டன் பிரபாகரன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. பல தியேட்டர்களில் 100 நாட்களும், பல தியேட்டர்களில் 275 நாட்களும் ஓடி இப்படம் வெள்ளி விழாவை கண்டது.
சந்தன கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லன் கதாபாத்திரத்தை அமைத்து அதில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்து அதில் அரசியல் மற்றும் பரபர ஆக்சன் காட்சிகளை வைத்து இப்படத்திற்கு ஆர்.கே செல்வமணி அமைத்திருந்த கதை, திரைக்கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அனல் பேசும் வசனங்களும், அதிரடியான சண்டை காட்சிகளும் ரசிகர்களை கட்டிப் போட்டது.
தற்போது 34 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள். 4K தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 22 ஆம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் 7 நாட்களில் இப்படம் 12.4 கோடு வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
ஒருபக்கம், அதே 22ம் தேதி ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி ஹீரோவாக நடித்த இந்திரா திரைப்படமும் வெளியானது. கண்பார்வை இழந்த ஒரு போலிஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கை துப்பறிவது போல படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. கேப்டன் பிரபாகரனுக்கு நல்ல வசூல் இருந்ததால் இந்திரா படத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. துவக்கத்திலேயே சில லட்சங்களை மட்டுமே வசூலித்து படம் ஒரு வாரத்திலேயே இந்திரா திரைப்படம் தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்டது.
