Kaantha boX office: முதல் நாள் வசூலில் லக்கி பாஸ்கரிடம் தோற்ற காந்தா
லக்கி பாஸ்கர் வெற்றி படத்தை அடுத்து துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் காந்தா. பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் செல்வமணி செல்வராஜ்.
புகழ்பெற்ற நடிகனின்ன் ஈகோ பிரச்சனையே படத்தின் மையகருவாக உள்ளது. இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. காரணம் கமர்சியல் விசயங்கள் இல்லாமல் கலை படமாக உருவாகியிருப்பதால் அனைத்து தரப்பினரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் இபடம் வசூலித்துள்ள முதல் நாள் தொகை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. Sacnilk இணையத்தில் வெளியான தகவலின்படி, முதல் நாள் ரூ 4 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் துல்கரின் முந்தய படமான லக்கி பாஸ்கரின் முதல் நாள் வசூலில் இப்படம் சற்று பின் தங்கியுள்ளது. லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூல் ரூ 6.45 கோடி ஆகும்.
இன்று சனிக்கிழமை மர்றும் நாளை ஆகிய இரு நாட்களில்கான்ந்தா பட வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
