
Box Office
வசூல் ரெக்கார்ட்!.. KGF2-வை தாண்டிய காந்தாரா 2… 5 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….
Kantara 2: பல வருடங்களாகவே கன்னட திரைப்படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரிய வசூலை பெற்றது இல்லை. ஆனால் யாஷ் நடிப்பில் வெளியான KGF திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதன் பின்னரே கன்னடத்தில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என்கிற நம்பிக்கை பலருக்கும் வந்தது. அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா திரைப்படம் 2022ம் வருடம் வெளியாகி தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நல்ல வசூலை பெற்றது.
மூன்று வருடங்கள் கழித்து தற்போது காந்தாரா 2 படம் Kantara Chapter 1 என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவையா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி வெளியான இந்த திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. கர்நாடகாவிலேயே இந்த படம் KGF2 வசூலை தாண்டி இருக்கிறது. KGF2 திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 73.50 கோடி வசூல் செய்திருந்த நிலையில் காந்தாரா 2 திரைப்படம் கர்நாடகாவில் 79 கோடி வசூல் செய்திருக்கிறது.

இதன் மூலம் KGF2 சாதனையை முறியடித்திருக்கிறது. கன்னட திரையுலகமே காந்தாரா 2 வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. கன்னட திரை பிரபலங்கள் பலரும் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். காந்தாரா 2 திரைப்படம் முதல் நாள் 61.85 கோடி, இரண்டாம் நாள் 45.4 கோடி, மூன்றாம் நாள் 55 கோடி, நான்காம் நாள் 63 கோடி, 5ஆம் நாள் 30.50 கோடி என 5 நாட்களில் இப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் 255.75 கோடி வசூல் செய்திருக்கிறது.
கர்நாடகாவில் மட்டும் விரைவில் இப்படம் 200 கோடி வசூலை தாண்டவிருக்கிறது. இதற்கு முன் காந்தாரா முதல் பாகம் கர்நாடகாவில் 183.60 கோடி வசூல் செய்ததே அதிக வசூலாக இருந்தது. தற்போது அதனை இரண்டாம் பாகம் அதை தாண்டவிருக்கிறது.