1. Home
  2. Box office

வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய காந்தாரா 2!.. 11 நாள் வசூல் எவ்வளவு கோடி தெரியுமா?!...

kantara2
காந்தாரா 2 படம் 11 நாட்களில் செய்த வசூல்

Kantara Chapter 1


Kantara 2: 2022ம் வருடம் கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை ரிசப் செட்டி இயக்கி நடித்திருந்தார். இந்த படம் தமிழ்,ஹிந்தி நேட்டிவிட்டியோடு ஒத்துப் போகவில்லை என்றாலும் அதில் காட்டப்பட்ட பஞ்சுருளி தெய்வம் தொடர்பான காட்சிகள் ரசிகர்களிடம் கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தியதால் இப்படம் மெகா வெற்றியை பெற்றது.

மூன்று வருடங்கள் கழித்து தற்போது காந்தாரா 2 படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தையும் ரிசப் செட்டியே இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வேலைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் நடந்து வந்தது.

கடந்த 2ம் தேதி உலகமெங்கும் Kantara Chapter 1 வெளியானது .வெளியான நாள் முதலே இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற VFX மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

முதல் நாளிலிருந்தே காந்தாரா 2 திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. 8 நாட்களிலேயே இப்படம் 500 கோடி வசூலை தாண்டியது. தற்போது படம் வெளியாகி 11 நாள் ஆகிவிட்ட நிலையில் காந்தாரா 2 உலகமெங்கும் 655 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

kantara2

இதில் வெளிநாடுகளில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது காந்தாரா 2. அதேபோல் ஹிந்தியிலும் இப்படம் 100 கோடி வரை வசூல் செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால் காந்தார 2 படம் 1000 கோடி வசூலை தொட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.