
Box Office
இட்லி கடையை விட 3 மடங்கு வசூல் செய்த காந்தாரா 2… இந்த வருஷ மெகா ஹிட்!….
Kantara Chapter 1: கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2002ம் வருடம் வெளியான கன்னட திரைப்படமான காந்தாரா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நல்ல வசூலை பெற்றது. 20 கோடி பட்ஜெட்டில் உருவானது படம் 400 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்பட்டது. அந்த படம் கொடுத்த மெகா வெற்றியின் நம்பிக்கையில் Kantara Chapter 1 அதாவது, காந்தாரா படத்தின் முந்தைய கதையை கடந்த மூன்று வருடங்களாக எடுத்து வந்தார் ரிஷப் செட்டி. இந்த படத்திலும் அவரே ஹீரோவாக நடித்த, ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவையா, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
அதிக பட்ஜெட்டில் உருவான இப்படம் அக்டோபர் 2ம் தேதியான நேற்று உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் கண்டிப்பாக இப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்பட்டது. காந்தாரா படத்தின் கிளைமாக்ஸ் எங்கு முடிந்ததோ அங்கிருந்தே படத்தை துவங்கினார்கள். முன்னோர்கள் ஏன் திடீரென காணாமல் போனார்கள் என்பதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை சொல்லப்பட்டது. காந்தாரா சாப்டர் ஒன் படத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்ஷனும், VFX காட்சிகளும் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்று வருகிறது.

முதல் காட்சி வெளியான உடனேயே இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் இப்படத்தை பாராட்டி பலரும் எழுதினார்கள். எனவே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கண்டிப்பாக பலருக்கும் எழுந்திருக்கிறது. அதோடு இது ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படம் என பலரும் சொல்ல பலரும் படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இப்படம் 60 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் ஹிந்தி மொழியிலேயே இப்படம் 19ல் இருந்து 21 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதை அடுத்து இந்த வருடத்தின் மெகா ஹிட் என நடிகர் பிரபாஸ், ஜூஜ்னியர் என்.டி.ஆர் ஆகியோர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஒருபக்கம் தமிழில் வெளியான தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெளியாக இரண்டு நாட்களில் 20 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இட்லி கடையோடு ஒப்பிட்டால் காந்தாரா சாப்டர் ஒன் மூன்று மடங்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அதே நேரம் Kantara Chapter 1 ஒரு பேன் இண்டியா படம். ஆனால் இட்லி கடை தமிழ், தெலுங்கு மொழிகளில் ஃபீல் குட் படமாக வெளிவந்திருக்கிறது. எனவே காந்தாரா சாப்டர் ஒன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு இட்லி கடை படத்திற்கு கிடைக்காதது ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.