தக் லைப் வசூலை தாண்டிய குபேரா!. முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவு கோடியா?!...

by MURUGAN |
kubera
X

Kubera movie: தெலுங்கு சினிமா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம்தான் குபேரா. இந்த படத்தில் தனுஷுன் தோற்றம் கொண்ட போஸ்டர் வெளியானபோதே படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. ஏனெனில், இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார் என சொன்னார்கள்.

அதன்பின் வெளியான டீசர், டிரெய்லர் ஆகியவையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு, கடந்த வாரத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்ம்கா உள்ளிட்ட படக்குழு படத்திற்கு புரமோஷன் செய்தார்கள். தனுஷ் தன்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பன்ச் வசனமெல்லாம் பேசினார். நாகார்ஜுனா கூலி படம் பற்றிய அப்டேட்டுகளை கொடுத்தார். இந்நிலையில்தான் குபேரா படம் நேற்று வெளியானது.

மும்பையில் ஒரு கார்ப்பரேட் வில்லன் ஒரு அரசு பிராஜெக்டை பினாமி பெயர்களில் எடுத்து தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற திட்டம் போடுகிறார். அவருக்கு சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவும் உதவுகிறார். அதற்காக 4 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கி அதில் பணம் வந்ததும் அவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார் வில்லன். அதிலிருந்து தனுஷ் மட்டும் தப்பிக்கிறார்.


அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நேற்று படம் வெளியான முதலே படம் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறினார்கள். குறிப்பாக தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அதேநேரம், இயக்குனர் தெலுங்கு என்பதாலும், தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் என்பதாலும் ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வுதான் வருகிறது என சிலர் கூறினார்கள்.

மேலும், படம் 3 மணி நேரத்திற்கும் மேல் ஓடுவதாலும், படத்தில் அங்கங்கே லேக் இருப்பதாலும் தொய்வை ஏற்படுத்துவதாகவும் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சி சரியாக அமைக்கப்படவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். எனவே, குபேரா சூப்பர் ஹிட் அடிக்க வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினார்கள்.

குபேரா தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியான நிலையில் இப்படம் முதல் நாளில் மூன்று மொழிகளிலும் சேர்த்து 18 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வருவதால் போகப் போக வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கமலின் தக் லைப் படத்தின் முதல் நாள் வசூல் 15.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story