2025-ல் அதிக வசூலை அள்ளிய 5 படங்கள்!… முதலிடத்தில் குட் பேட் அக்லி!…
Coolie: கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் எல்லா திரைப்படங்களும் வெற்றிப் படங்களாக அமைவதில்லை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பெரிய நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடையும். அதேபோல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் வரும் சின்ன படங்கள் கூட நல்ல வெற்றியே பெறும். அதை கணிக்க முடியாது. அந்த வகையில் 2025 துவங்கி 8 மாதங்களில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற 5 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
இதில் 5வது இடத்தில் இருப்பது பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடித்து வெளியான தலைவன் தலைவி திரைப்படம். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் காதல், அவர்களுக்கு இடையே வரும் ஈகோ, சண்டைகளை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் தமிழ்நாட்டில் 64.75 கோடியை வசூல் செய்தது.
4வது இடத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தில் கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஸ்கின் நடித்திருந்தார். கல்லூரி படிப்பை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத இந்த கால இளைஞர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருந்தது இந்த படம் 82.50 கோடியை வசூல் செய்தது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 3வது இடத்தில் இருக்கிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் இந்த படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். ஒரு ஆங்கில படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியானது. இந்த படம் 83 கோடிக்கும் மேல் வசூல் செய்து மூன்றம் இடத்தில் இருக்கிறது. 4வது இடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் இருக்கிறது. இந்த படத்திற்கும் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதையும் தாண்டி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 148.8 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
2025ம் வருடத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படங்களில் முதலிடத்தில் இருப்பது அஜித்தின் குட் பேட் அக்லி. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 152.63 கோடி வசூல் செய்திருக்கிறது. அஜித்தை எப்படி பார்த்தால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அப்படி இந்த படத்தில் அவரை ஆதிக் ரவிச்சந்திரன் காட்டி இருந்ததால் அஜித் ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பை பெற்றது.
இது இப்போதைய நிலவரம்தான் என்றாலும் இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. தீபாவளிக்கும் சில படங்கள் வெளியாகவுள்ளது. எனவே அதில் ஏதேனும் திரைப்படங்கள் இந்த வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
