1. Home
  2. Box office

4வது நாளிலேயே ஊத்திக்கிச்சே!… மொத்தமாக சரிந்த மதராஸி வசூல்!..

4வது நாளிலேயே ஊத்திக்கிச்சே!… மொத்தமாக சரிந்த மதராஸி வசூல்!..

Madharaasi: அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்க துவங்கினார். இதில் மதராஸி படம் முதலில் முடிவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

வழக்கமான முருகதாஸ் ஸ்டைலில் காதல் கலந்த ஒரு பக்கா ஆக்சன் படமாக மதராஸி உருவாக இருக்கிறது. கஜினி படத்தில் சூர்யாவுக்கு அமைந்தது போல காதலித்த பெண்ணிற்காக எதையும் செய்யும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் அமைந்திருக்கிறது. அவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார் எஸ்.கே.

துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மதராஸி படத்திலும் முக்கிய வில்லனாக அசத்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் அவரும் அடித்து ஆடி இருக்கிறார். அவர் வரும் சண்டை காட்சிகள் எல்லாமே தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரும் சிவகார்த்திகேயனும் மோதும் சண்டை காட்சிகள் ஆக்சன் விரும்பிகளுக்கு விருந்தாகவே அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தாலும் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதேநேரம் பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது.

4வது நாளிலேயே ஊத்திக்கிச்சே!… மொத்தமாக சரிந்த மதராஸி வசூல்!..
siva 5

இந்த படத்திற்கு முன்பதிவு மந்தமாகவே இருந்தது. மேலும், சிறப்பாக சொல்லும்படி படத்தின் திரைக்கதை எதுவும் இல்லை என்கிற விமர்சனமும் இந்த படத்திற்கு வந்தது. இதன் காரணமாக நான்காவது நாளிலேயே இப்படத்தின் வசூல் படுத்துவிட்டது. பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை பதிவிடும் Sacnilk இணையதளத்தின் படி படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் இப்படம் 13.65 கோடியும், இரண்டாம் நாள் 12.1 கோடியும் மூன்றாம் நாள் 10.65 கோடியும் வசூல் செய்த நிலையில் நான்காம் நாளான நேற்று இப்படம் 4.15 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிடும்போது திங்கட்கிழமை 50 சதவீதத்திற்கும் கீழ் வசூல் குறைந்திருக்கிறது. மொத்தத்தில் 4 நாட்களில் இப்படம் 40.55 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளில் இப்படம் 10 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்பதால் மொத்தமாக இப்படத்தின் வசூல் 50 கோடியை தாண்டி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த வாரம் இந்த படத்திற்கு பெரிய வசூல் கிடைக்காது என்று கணிக்கப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.