Bison: எல்லா தியேட்டரும் காலி!.. ஆந்திராவில் அவுட்டான பைசன்!.. சோகங்கள்!...
சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரம் நடித்த பைசன் மற்றும் ஹாரீஸ் கல்யாண் நடித்த டீசல் ஆகிய 3 படங்களும் கடந்த 17ம் தேதி ஒன்றாகவே வெளியானது. இதில் துவக்கம் முதலே டியூட் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. பைசன் படமும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு பாராட்டுக்களையும் பெற்றது. அதேநேரத்தில் வசூலிலும் குறை வைக்கவில்லை.
இந்த இரண்டையும் ஒப்பிடும்போது டீசல் படத்திற்கு வசூல் குறைவாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் பைசனுக்கும், டியூட் படத்திற்கும் இடையேதான் போட்டி என்கிற நிலை உருவானது. வசூலை பொறுத்தவரை டியூட் திரைப்படம் முதலிடத்தில் இருக்கிறது. படம் வெளியான வாரத்தில் இப்படம் 100 கோடி வசூல் செய்துவிட்டது.
பைசன் படமும் 40 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தற்போது இந்த படங்கள் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அடுத்த வசூல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், டியூட் 100 கோடி வசூலை தாண்டியிருப்பதாகவும், டியூட் 50 கோடி வரை வசூல் செய்திருக்கலாமென கணிக்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பிருப்பதால் தமிழில் வெளியான அதேநாளில் டியூட் தெலுங்கிலும் ஆந்திராவில் வெளியானது. கணிசமான திரையரங்குகளில் படம் வெளியானது. டியூட் படம் தெலுங்கிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதேநேரம் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த பைசன் கடந்த 24ம் தேதிதான் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் வெளியானது. பைசன் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கவில்லை அநேகமாக. படம் வெளியான 2 நாட்களில் பெரிய வசூல் இல்லை என்கிறர்கள். ஆந்திர நேட்டிவிட்டியோடு பைசன் படம் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள்.
பைசன் தெலுங்கு வெர்சனுக்காக துருவ் உள்ளிட்ட படக்குழு ஹைதரபாத்துக்கு சென்று புரமோஷன் செய்தார்கள். ஆனால், எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை. தெலுங்கில் பைசன் வெற்றியா? தோல்வியா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
