Mask Box Office: ஆண்ட்ரியா வீடு திரும்ப வந்துடும்...மாஸ்க் 2ம் நாள் வசூல்
விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். பின்னர் பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்று பிரபலமானார்.
விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். பின்னர் பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் கவினும் ஒருவர்.இவர் நடித்த லிப்ட், டாடா ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றன. அதன் பின் நடித்த ஸ்டார், கிஸ், ஸ்டார், பிளடி பெக்கர் ஆகிய படங்கள் நல்ல எதிரிபார்ப்புகள் இருந்தும் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் கவின், ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் படம் கடந்த வெள்ளி கிழமை வெளியானது. டிரைலரே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த , படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்பட்ம் வெளியான முதல் நாள் இந்திய அளவில் ரூ. 1 கோடி வ்சூல் செய்தது. வார விடுமுறை நாளான சனி, ஞாயிறு நிச்சயம் வ்சூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மாஸ்க் படத்தின் 2ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய அளவிம் ரூ.2.50 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்க் படத்திற்காக அண்ட்ரியா தனது வீட்டினை அடமானம் வைத்து முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
