Mask: கவினுக்கு கை கொடுத்ததா மாஸ்க்?.. முதல் நாள் வசூல் நிலவரம்!...
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த கவின் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக மாறினார். அதில் லிஃப்ட், டாடா போன்ற படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. அதேநேரம் ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் ஆகிய படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமையவில்லை.
இந்நிலையில்தான் அவரின் நடிப்பில் மாஸ் என்கிற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்க வெற்றிமாறனும், ஆண்ட்ரியாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
முதல் காட்சி வெளியானவுடனேயே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. எமோஷனல் காட்சிகளை கொண்ட நல்ல திரில்லர் படம் என பலரும் பாராட்டினார்கள். சில குறைகள் இருந்தாலும் கவின், ஆண்ட்ரியா நடிப்பு, ஜிவி பிரகாஷின் இசை, படத்தில் இடம்பெற்ற டார்க் காமெடி காட்சிகள் ஆகியவை நன்றாக இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். ஆண்ட்ரியா தனது வீட்டை அடமானம் வைத்து இந்த படத்தை தயாரித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.
நேற்று வெளியான சில படங்களில் மாஸ்க் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ஒரு கோடி வசூல் வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் பதிவிட்டிருக்கிறது. இன்னும் 2 வார இறுதிநாட்கள் இருப்பதால் படம் எவ்வளவு வசூலை பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
