முதல்நாளில் மத கஜ ராஜா வசூல் எப்படி? இதோ ரிப்போர்ட்
மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. விஷால் நடித்த இந்தப் படத்தை சுந்தர்.சி. இயக்கியுள்ளார். சந்தானம் காமெடியில் கலக்கி இருக்கிறார். அஞ்சலி, வரலட்சுமி என இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு கிளாமர் விருந்தைப் படைக்கின்றனர்.
கலகலப்பான காமெடி: ரசிகர்களுக்கு சுந்தர்.சி. வழக்கம்போல கலகலப்பான காமெடி படத்தைக் கொடுத்துள்ளார். படம்; முழுவதும் சந்தானம் தான் வந்து ரசிகர்களைப் பரவசப்படுத்துகிறார். இவர் ஏன் ஹீரோவாக நடிக்கப் போனார். பேசாமல் காமெடியனாகவே இருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தளவுக்கு கவுண்டர் கொடுத்துள்ளார்.
சர்ச்சை: விஷாலுக்கு தற்போது உடல்நிலை சற்று குறைவாக உள்ளது. என்றாலும் அதையும் பொருட்படுத்தாமல் பட விழாக்களில் கலந்து கொண்டு புரொமோஷன் செய்துள்ளார். அதை கை நடுக்கம் என சர்ச்சையாக்கி வந்தனர்.
அது ஒருபுறம் இருக்க 12 ஆண்டுகளுக்கு முன் விஷால் ஆளும் உயரமாக, கருப்பாக களையாக இருந்த விஷாலின் நடிப்பு ரசிகர்களை அப்போது கவர்ந்த மாதிரி அதில் சற்றும் குறையாமல் இப்போதும் கவர்ந்து வருகிறது. படத்தில் மனோபாலா, சிட்டிபாபு, மயில்சாமி உள்பட பல மறைந்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தில் விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.
ஆர்யா, சதா: பாடல்கள் எல்லாமே அருமையாக உள்ளன. ஆர்யாவும், சதாவும் சிறப்புத்தோற்றத்தில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நேற்று வெளியானது. பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. நல்லா சிரித்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக பொங்கல் விருந்தாக இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லலாம்.
வசூல்: படத்தின் பெயரே மதகஜராஜா என புதுமையாக உள்ளதால் அப்படி என்னப்பா படத்தில் விசேஷம் என்று ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிவதைக் காண முடிகிறது. சுந்தர்.சி.யை நம்பி இனி அவர் படத்தைப் பார்க்கலாம்.
முதல் நாளன்று இந்தப் படத்தின் வசூல் இந்திய அளவில் 3.1 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.