Middle class Box office: மிடில் கிளாஸ் படத்தின் 2ம் நாள் வசூல் நிலவரம்
மரகத நாணயம், முண்டாசுபட்டி உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிவந்த முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில். கிளாஸ் விஜயலட்சுமி நாயகியாக நடித்திருந்த இப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது. இப் படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் என்ற புதிய இயக்குனர் இயக்கியிருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைக்கிறது. பின் அது காணாமல் போனால் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு. படத்தில் விஜயலட்சுமியும் முனிஷ்காந்தும் போட்டி போட்டு கொண்டு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும் சரி, பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் மிடில் கிளாஸ் படத்தின் 2ம் நாள் கலெக்ச்ன் குறித்த தகவல் வெளிவந்துள்ளன. அதன்படி இப்படம் 2ம் நாளில் 63 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
